வடமாடு ஜல்லிக்கட்டில் 3 வீரர்கள் காயம்

ஓணாங்குடியில் நடைபெற்ற வடமாடு ஜல்லிக்கட்டில் 3 வீரர்கள் காயம் அடைந்தனர்.

Update: 2023-04-04 18:27 GMT

அரிமளம் ஒன்றியம் ஓணாங்குடி முத்துமாரியம்மன் கோவில் பங்குனி திருவிழாவையொட்டி வடமாடு ஜல்லிக்கட்டு நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. இதில் புதுக்கோட்டை, திருச்சி, சிவகங்கை, திண்டுக்கல் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து 12 மாடுகள் கலந்து கொண்டன. மாடுகளை பிடிப்பதற்கு 9 பேர் அனுமதிக்கப்பட்டனர். 25 நிமிடங்கள் போட்டி நேரமாக நிர்ணயிக்கப்பட்டிருந்தது.

வடமாடு ஜல்லிக்கட்டு நிகழ்ச்சியில் கலந்து கொள்ள வந்த மாடுகளை கால்நடை டாக்டர்கள் பரிசோதனை செய்து போட்டியில் கலந்து கொள்ள அனுமதித்தனர். இதேபோல் வீரர்கள் பரிசோதனை செய்யப்பட்டு போட்டியில் கலந்து கொள்ள அனுமதிக்கப்பட்டனர். இதில் 10 மாடுகளை வீரர்கள் அடக்கினார்கள். காளைகள் முட்டியதில் 3 வீரர்கள் லேசான காயம் அடைந்தனர். அவர்களுக்கு அரிமளம் மருத்துவ குழுவினர் சிகிச்சை அளித்தனர். வடமாடு ஜல்லிக்கட்டு நிகழ்ச்சி திருமயம் தாசில்தார் புவியரசன் மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகள் மேற்பார்வையில் நடைபெற்றது.

வடமாடு ஜல்லிக்கட்டு நிகழ்ச்சியை ஓணாங்குடி மற்றும் சுற்றுவட்டார கிராமங்களை சேர்ந்த பொதுமக்கள் கண்டு ரசித்தனர். பொன்னமராவதி போலீஸ் துணை சூப்பிரண்டு அப்துல் ரகுமான், கே.புதுப்பட்டி இன்ஸ்பெக்டர் பெரியசாமி தலைமையிலான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். 

Tags:    

மேலும் செய்திகள்