பெண் போலீஸ் ஏட்டுக்கு கொலை மிரட்டல் விடுத்த 3 பேர் கைது

பெண் போலீஸ் ஏட்டுக்கு கொலை மிரட்டல் விடுத்த 3 பேர் கைது

Update: 2023-08-19 19:27 GMT

கும்பகோணத்தில் பெண் போலீஸ் ஏட்டுக்கு கொலை மிரட்டல் விடுத்த 3 பேரை போலீசார் கைது செய்தனர்.

சாட்சியங்களை ஆஜர்படுத்தினர்

கும்பகோணம் கிழக்கு போலீஸ் நிலையத்தில் ஏட்டாக வேலை பார்த்து வருபவர் ராதிகா. நேற்றுமுன்தினம் கும்பகோணம் கிழக்கு போலீசாரால் திருட்டு வழக்கில் கைது செய்யப்பட்டு சென்னை புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ள பிறையரசன் என்பவர் விசாரணைக்காக கும்பகோணம் கோர்ட்டுக்கு போலீஸ் காவலில் அழைத்து வரப்பட்டார். இந்த வழக்கில் பிறையரசனுக்கு எதிராக சாட்சியங்களை கும்பகோணம் கிழக்கு போலீசார் கோர்ட்டில் ஆஜர்படுத்தினர். இந்த வழக்கு தொடர்பான கோர்ட்டு அலுவல் பணிகளை தலைமை காவலரான ராதிகா மேற்கொண்டிருந்தார். பின்னர் விசாரணை முடிந்ததும் பிறையரசனை போலீஸ் பாதுகாப்புடன் போலீசார் சென்னை புழல் சிறைக்கு அனுப்பி வைத்தனர்.

பெண் போலீசுக்கு கொலை மிரட்டல்

வழக்கு விசாரணை முடிந்து ராதிகா கோர்ட்டில் இருந்து போலீஸ் நிலையத்திற்கு செல்வதற்காக கோர்ட்டு வளாகத்தில் நிறுத்தப்பட்டிருந்த தனது மோட்டார் சைக்கிளை எடுப்பதற்காக வந்துள்ளார். அப்போது அங்கு நின்று கொண்டிருந்த பிறையரசன் தாயார் அமிர்தவல்லி (47), பிறையரசன் சகோதரி கவுசல்யா (26) மற்றும் ஆதரவாளர் சந்துரு (22) ஆகியோர் ராதிகாவை வழிமறித்து பிறையரசனுக்கு எதிராக சாட்சியங்களை கோர்ட்டில் ஆஜர்படுத்தியதாக கூறி அவரை தாக்கி கொலை மிரட்டல் விடுத்துள்ளனர்.

3 பேர் கைது

இதுகுறித்து ராதிகா கும்பகோணம் கிழக்கு போலீசில் புகார் கொடுத்தார். அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து ராதிகாவுக்கு கொலை மிரட்டல் விடுத்த அமிர்தவல்லி, கவுசல்யா, சந்துரு ஆகிய 3 பேரையும் நேற்று கைது செய்து கோர்ட்டில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்