கஞ்சா விற்ற 3 பேர் கைது

யில் கஞ்சா விற்ற 3 பேர் கைது செய்யப்பட்டனர்.;

Update:2023-10-23 00:15 IST

சீர்காழி:

சீர்காழி உப்பனாற்றங்கரையில் கஞ்சா விற்கப்படுவதாக போலீசாருக்கு தகவல் கிைடத்தது. இதன்பேரில் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று கஞ்சா விற்ற சீர்காழி சேந்தங்குடி பள்ளிவாசல் தெருவை சேர்ந்த தமீம் மகன் முகமதுபைசல்(வயது 21), வேட்டங்குடி கிராமத்தை சேர்ந்த கருணாநிதி மகன் கவின்குமார்(22), ஆகியோரை கைது செய்து 100 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்தனர். இதைப்போல அரசூர் ரவுண்டானா பகுதியில் கஞ்சா விற்ற அதே பகுதியை சேர்ந்த சஞ்சய்யை(19) போலீசார் கைது செய்து அவாிடம் இருந்து 100 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்