மீனாட்சியாபுரம் தேவியாற்றின் குறுக்கே ரூ.3 கோடியில் பாலம்

மீனாட்சியாபுரம் தேவியாற்றின் குறுக்கே ரூ.3 கோடியில் பாலம் அமைய உள்ளது.

Update: 2022-09-09 19:21 GMT

ராஜபாளையம்,

ராஜபாளையம் அருகே மீனாட்சியாபுரம் ஊராட்சியிலுள்ள பெருந்தலைவர் காமராஜர் மேல்நிலைப்பள்ளியில் தேசிய குடற்புழு நீக்க நாளையொட்டி மாணவ-மாணவிகளுக்கு மருந்து மாத்திரைகளையும், விலையில்லா சைக்கிள்களையும் தங்கப்பாண்டியன் எம்.எல்.ஏ. வழங்கினார். அப்போது அவர் கூறியதாவது:-

மாணவ-மாணவிகளின் ஆரோக்கியத்திற்கும், வளர்ச்சிக்கும் முக்கியத்துவம் கொடுத்து தமிழகம் முழுவதும் உள்ள பள்ளிகளில் குடற்புழு நீக்க மருந்துகளை வழங்க முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தினார். அதன்படி தற்போது வழங்கப்பட்டுள்ளது.

மீனாட்சியாபுரம் பொதுமக்கள் பயன்பாட்டிற்காக ரூ.3 கோடியில் மீனாட்சியாபுரம் தேவியாற்றியின் குறுக்கே பாலம் அமைக்கப்பட உள்ளது. எனவும். மேலும் சட்ட மன்ற உறுப்பினர் நிதியிலிருந்து ரூ.10 லட்சம் மதிப்பில் நூலகம் அமைக்கப்பட உள்ளது. இதனை மாணவர்கள் அனைவரும் பயன்படுத்தி கொள்ள வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

இதில் மருத்துவர் கருணாகரபிரபு, பள்ளி தாளாளர் பவுன்ராஜ், தலைமை ஆசிரியர் பாஸ்கர், மாவட்ட மீனவரணி அமைப்பாளர் நவமணி, கிளை செயலாளர் மூர்த்தி, நிர்வாகிகள், மாணவ-மாணவிகள், ஆசிரியர்கள் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.


Tags:    

மேலும் செய்திகள்