அரசு ஊழியர்கள் வேலை நிறுத்தத்திற்கு இந்திய வங்கி ஊழியர் சம்மேளனம் ஆதரவு

ஜாக்டோ–ஜியோ அமைப்பினர் நடத்திய தர்ணா போராட்டத்திற்கு இந்திய வங்கி ஊழியர் சம்மேளனம் – தமிழ்நாடு சார்பாக தலைவர்கள் நேரில் சென்று ஆதரவு தெரிவித்தனர்.

Update: 2017-09-11 22:45 GMT
சென்னை,

வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ள ஜாக்டோ–ஜியோ அமைப்பின் ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்களுக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் நேற்று சென்னை எழிலகம் முன்பு ஜாக்டோ–ஜியோ அமைப்பினர் நடத்திய தர்ணா போராட்டத்திற்கு இந்திய வங்கி ஊழியர் சம்மேளனம் – தமிழ்நாடு சார்பாக தலைவர்கள் நேரில் சென்று ஆதரவு தெரிவித்தனர்.

இதுகுறித்து இந்திய வங்கி ஊழியர்கள் சம்மேளனம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:–

4 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி லட்சக்கணக்கான ஆசிரியர்களும், அரசு ஊழியர்களும் செப்டம்பர் 7 முதல் காலவரையற்ற வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டு வருகின்றனர். 

போராட்டத்தில் ஈடுபட்டுள்ள சங்கங்களின் தலைவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி சுமுகமாக பிரச்சினைகளை தீர்க்க வேண்டிய மாநில அரசு, அந்த கோரிக்கைகளை ஏற்காமல் காலம் தாழ்த்தும் முயற்சியில் ஈடுபடுகிறது. சாதாரண மக்களும், மாணவர்களும் பாதிப்படையாத வகையில் தமிழக அரசு உடனடியாக போராடும் ஊழியர்களின் நியாயமான கோரிக்கைகளை ஏற்க முன்வர வேண்டும்.

இவ்வாறு அந்த செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்