எல்லை தாண்டி வந்து மீன்பிடித்ததாக கூறி தமிழக மீனவர்கள் 4 பேர் சிறைபிடிப்பு

நாகை மாவட்டம் வேதாரண்யம் தாலுகா ஆறுகாட்டுத்துறை கிராமத்தை சேர்ந்தவர் கபிலன் (வயது 49). மீனவர்.

Update: 2017-08-14 22:15 GMT
வேதாரண்யம்,

தனக்கு சொந்தமான பைபர் படகில் அதே பகுதியை சேர்ந்த 3 மீனவர்களுடன் நேற்று முன்தினம் மதியம் மீன்பிடிக்க கடலுக்கு சென்றார்
. கோடியக்கரையின் தென்கிழக்கே சேதுசமுத்திர திட்ட தூர்வாரும் இடத்தின் அருகே மீன்பிடித்து கொண்டிருந்தனர்.

அங்கு வந்த இலங்கை கடற்படையினர் எல்லை தாண்டி வந்து மீன்பிடித்ததாக கூறி மீனவர்கள் 4 பேரையும் கைது செய்தனர். மேலும், அவர்களின் படகை பறிமுதல் செய்ததுடன், பிடித்து வைத்திருந்த மீன்களையும் அள்ளி சென்றனர். தொடர்ந்து அவர்களை இலங்கை காங்கேசன் துறைமுகத்திற்கு கொண்டு சென்றனர்.

தமிழக மீனவர்கள் சிறைபிடிக்கப்பட்டு, ஏற்கனவே இலங்கை சிறையில் உள்ள நிலையில் மேலும் 4 மீனவர்கள் சிறைபிடிக்கப்பட்ட சம்பவம் மீனவ கிராமங்களில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. சிறைபிடிக்கப்பட்ட மீனவர்களையும், படகுகளையும் உடன் மீட்டு தர வேண்டும் என மீனவர்களின் உறவினர்கள் மத்திய, மாநில அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

இலங்கை கடற்படையின் நடவடிக்கையை கண்டித்து நேற்று ஆறுகாட்டுத்துறையில் மீனவர்கள் மீன்பிடிக்க செல்லாமல் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர்.

மேலும் செய்திகள்