திசையன்விளை:
உவரி அருகே உள்ள காரிக்கோவில் பத்திரகாளி அம்மன் கோவில், மரக்காட்டுவிளை முத்தாரம்மன் கோவில்களில் நேற்று முன்தினம் இரவு மர்ம நபர்கள் புகுந்துள்ளனர். அங்குள்ள உண்டியலை உடைத்து அதில் இருந்த காணிக்கையை திருடி சென்றுவிட்டதாக கோவில் நிர்வாகிகள் சக்திவேல், தங்கப்பழம் ஆகியோர் உவரி போலீசில் புகார் செய்தனர். இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.