மது சாராயம் விற்ற பெண் உள்பட 2 பேர் கைது

மது, சாராயம் விற்ற பெண் உள்பட 2 பேர் கைது செய்யப்பட்டனர்.

Update: 2023-05-20 17:44 GMT

ஜோலார்பேட்டை

மது, சாராயம் விற்ற பெண் உள்பட 2 பேர் கைது செய்யப்பட்டனர்.

ஜோலார்பேட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் மங்கையர்கரசி, சப்-இன்ஸ்பெக்டர் சீனிவாசன் மற்றும் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது சின்னமூக்கனூர் மாரியம்மன் கோவில் தெரு பகுதியை சேர்ந்தவர் சேகர் என்பவரின் மனைவி ஜோதி (வயது 45) என்பவர் வீட்டின் பின்புறம் முட்புதரில் மறைத்து வைத்து டாஸ்மாக் மதுபாட்டில்களை விற்பனை செய்து கொண்டிருந்தார். அவரை போலீசார் கைது செய்து, 12 மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனர்.

மேலும் பக்கிரிதக்கா வி.எம்.வட்டம் பகுதியைச் சேர்ந்தவர் சந்தோஷ் (29) என்பவர் தனது வீட்டின் பின்புறம் 5 லிட்டர் சாராயம் மறைத்து வைத்து விற்பனை செய்தது தெரியவந்தது. இதையடுத்து அவரை போலீசார் கைது செய்து சாராயத்தை பறிமுதல் செய்து அழித்தனர்.

பின்னர் 2 பேரையும் திருப்பத்தூர் கோர்ட்டில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்