ஆர்.கே.பேட்டை அருகே அனுமதியின்றி சேவல் சண்டை நடத்திய 2 பேர் கைது

ஆர்.கே.பேட்டை அருகே அனுமதியின்றி சேவல் சண்டை நடத்திய இருவரை போலீசார் கைது செய்தனர்.;

Update: 2023-03-30 09:33 GMT

பள்ளிப்பட்டு தாலுகா அடுத்த ஆர்.கே. பேட்டை ஊராட்சி ஒன்றியம் புதுப்பேட்டை கிராமம் அருகே சிலர் பணம் வைத்து சேவல் சண்டை நடத்துவதாக ஆர்.கே. பேட்டை போலீசாருக்கு புகார்கள் வந்தன. இதையடுத்து சப்-இன்ஸ்பெக்டர் சிவா தலைமையில் போலீசார் அந்த பகுதியில் திடீர் சோதனை நடத்தினர். அப்போது சிலர் பணம் வைத்து அனுமதி இல்லாமல் சேவல் சண்டை நடத்திக் கொண்டு இருப்பது தெரிந்தது. உடனே போலீசார் அவர்களை விரட்டி பிடித்து சேவல் சண்டை நடத்திய ஸ்ரீ காளிகாபுரம் கிராமத்தைச் சேர்ந்த கிருஷ்ணன் (வயது 32), முருகன் (40) ஆகிய இருவரை கைது செய்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்