சட்ட விரோதமாக மது விற்ற 2 பேர் கைது
டாஸ்மாக் கடை அருகே சட்ட விரோதமாக மது விற்ற 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மேலூர்
மேலூரில் உள்ள வெள்ளநாதன்பட்டி டாஸ்மாக் கடை அருகே வசிப்பவர் செந்தில்வீரணன் (வயது 33). இவரது வீட்டில் பக்கவாட்டில் அனுமதியின்றி பார் நடத்துவதாக மேலூர் கிராம நிர்வாக அதிகாரி வடிவேல்ராவணனுக்கு புகார் வந்தது. இதுகுறித்து அவர் மேலூர் போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ஆனந்தஜோதி மற்றும் போலீசார் அங்கு சென்று சட்ட விரோதமாக பார் நடத்திய செந்தில்வீரணன், அங்கு பணிபுரிந்த நொண்டிக்கோவில்பட்டியை சேர்ந்த சேகர் (35) ஆகியோரை கைது செய்தனர்.