திருட்டில் ஈடுபட்ட சிறுவன் உள்பட 2 பேர் கைது

திருட்டில் ஈடுபட்ட சிறுவன் உள்பட 2 பேர் கைது செய்யப்பட்டனர்.

Update: 2023-06-17 20:18 GMT

கல்லக்குடி:

2 பேர் சிக்கினர்

கல்லக்குடி ராஜா தியேட்டர் பஸ் நிலையம் சர்வீஸ் ரோடு பகுதியில் நேற்று முன்தினம் கல்லக்குடி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் கோபிநாத் தலைமையில் போலீசார் வாகன சோதனை செய்தனர். அப்போது அந்த வழியாக பதிவு எண் இல்லாத வாகனத்தில் வந்த 2 பேர் போலீசாரை கண்டவுடன் அதிவேகமாக குறுக்கு வழியில் சென்றனர். போலீசார் தடுத்தும் அவர்கள் நிற்காத நிலையில், அந்த வாகனத்தை போலீசார் துரத்திச்சென்று மடக்கிப் பிடித்தனர்.

அவரிடம் போலீசார் நடத்திய விசாரணையில், அவர்கள் தஞ்சாவூர் மாவட்டம், பாபநாசத்தை சேர்ந்த செல்வராஜ்(வயது 28) மற்றும் 17 வயது சிறுவன் என்பது தெரியவந்தது. மேலும் அவர்கள் கல்லக்குடி போலீஸ் சரகத்தை சேர்ந்த மேலரசூர், கீழரசூர், கல்லகம், புள்ளம்பாடி பகுதியிலும், சிறுகனூர் போலீஸ் சரக பகுதியிலும் கடந்த 2 மாதமாக வீடுகளில் நகைகளை திருடி வந்ததும் தெரியவந்தது.

நகைகள் மீட்பு

இந்த திருட்டு சம்பவங்கள் குறித்து அந்தந்த போலீஸ் நிலையங்களில் பாதிக்கப்பட்டவர்கள் கொடுத்த புகாரின்பேரில் லால்குடி போலீஸ் துணை சூப்பிரண்டு அஜய்தங்கம், இன்ஸ்பெக்டர் பிரபு மற்றும் சப்-இன்ஸ்பெக்டர் கோபிநாத் தலைமையில் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளதும் போலீசாருக்கு தெரியவந்தது.

இதையடுத்து பிடிபட்ட 2 பேரிடம் இருந்தும், கல்லகம் கிராமத்தில் 2 பவுன், மேலரசூர் கிராமத்தில் 3 பவுன், புள்ளம்பாடி கிராமத்தில் 12¼ பவுன், கீழரசூர் கிராமத்தில் 7 பவுன் என அவர்கள் திருடிய மொத்தம் ரூ.12 லட்சம் மதிப்பிலான 24¼ பவுன் நகைகள் கைப்பற்றப்பட்டன. இதுகுறித்து கல்லக்குடி போலீசார் வழக்குப்பதிவு செய்து 2 பேரையும் கைது செய்தனர். இதில் செல்வராஜை லால்குடி குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி லால்குடி கிளை சிறையில் அடைத்தனர். சிறுவனை திருச்சி கூர்நோக்கு இல்லத்தில் அடைத்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்