ஆட்டோவில் சாராயம் கடத்திய 2 பேர் கைது
திண்டிவனத்தில் ஆட்டோவில் சாராயம் கடத்திய 2 பேர் கைது செய்யப்பட்டாா்.
திண்டிவனம்:
திண்டிவனம் சப்-இன்ஸ்பெக்டர் வினோத்ராஜ் தலைமையிலான போலீசார் ரெயில்வே ஒத்த கண் மேம்பாலம் அருகில் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக வந்த ஒரு ஆட்டோவில் 100 எம்.எல். அளவு கொண்ட 50 பாக்கெட்டுகளில் சாராயம் இருந்தது. விசாரணையில், கோவடி கிராமத்தை சேர்ந்த குப்புசாமி(வயது 65), ஆட்டோ டிரைவரான திண்டிவனம் இந்திரா நகரை சேர்ந்த ராஜசேகர் மகன் வேல்முருகன்(35) ஆகியோர் என்பதும், ஆட்டோவில் சாராயம் கடத்தியதும் தெரியவந்தது. இதையடுத்து 2 பேரையும் போலீசார் கைது செய்தனர். மேலும் சாராயம் மற்றும் ஆட்டோ பறிமுதல் செய்யப்பட்டது.