சாராயம் விற்ற 2 பேர் கைது

சாராயம் விற்ற 2 பேர் கைது செய்யப்பட்டனர்.

Update: 2023-03-27 19:00 GMT

நாகை மாவட்டம் கீழ்வேளூர் போலீஸ் சரகம் வடக்காலத்தூர் ஊராட்சியில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது வடக்காலத்தூர் மாரியம்மன் கோவில் தெருவில் அதே பகுதியை சேர்ந்த பாண்டியன் (வயது56) மற்றும் வடக்காலத்தூர் கீழத்தெருவில் அதே பகுதியை சேர்ந்த ஜனகராஜ் (62) ஆகியோர் சாராயம் விற்றது விசாரணையில் தெரியவந்தது. இது குறித்து கீழ்வேளுர் போலீஸ் இன்ஸ்பெக்டர் தியாகராஜன் மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து 2 பேரையும் கைது செய்து, இருவரிடம் இருந்தும் தலா 110 லிட்டர் சாராயத்தை பறிமுதல் செய்தனர். 

Tags:    

மேலும் செய்திகள்