17 மோட்டார் வாகன விபத்து வழக்குகளுக்கு தீர்வு

17 மோட்டார் வாகன விபத்து வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டது.

Update: 2023-03-11 19:26 GMT

உச்ச நீதிமன்றம், உயர் நீதிமன்றம் மற்றும் மாநில சட்டப்பணிகள் ஆணைக்குழுக்களின் வழிகாட்டுதலின் பேரில், பெரம்பலூரில் உள்ள மாவட்ட நீதிமன்றத்தில் மக்கள் நீதிமன்றம் நேற்று நடந்தது. மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு தலைவரும், மாவட்ட முதன்மை நீதிபதியுமான பல்கீஸ் தலைமையிலும், மாவட்ட சட்ட பணிகள் ஆணைக்குழு செயலாளரும், சார்பு நீதிபதியுமான (பொறுப்பு) அண்ணாமலை முன்னிலையிலும் இந்த மக்கள் நீதிமன்றம் நடைபெற்றது. இதில் மகிளா நீதிமன்ற அமர்வு நீதிபதி முத்துகுமரவேல், குற்றவியல் நீதித்துறை நடுவர் சங்கீதா சேகர் ஆகியோர்களை கொண்டு ஒரே அமர்வாக அமைக்கப்பட்டு, பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள நீதிமன்றங்களில் நிலுவையில் உள்ள 81 மோட்டார் வாகன விபத்து வழக்குகள் விசாரணைக்கு எடுத்து கொள்ளப்பட்டது. இதில் 17 வழக்குகளுக்கு ரூ.35 லட்சத்து 56 ஆயிரத்து 500-க்கு தீர்வு காணப்பட்டது. தீர்வு காணப்பட்ட மோட்டார் வாகன விபத்து வழக்குகளில் பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்தினருக்கு நீதிபதி பல்கீஸ் உத்தரவு சான்றினை வழங்கினார். இதில் அட்வகேட் அசோசியேசன் தலைவர் மணிவண்ணன் மற்றும் திருநாவுக்கரசு, அருணன் உள்ளிட்ட வக்கீல்கள், போலீசார், நீதிமன்ற பணியாளர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர். இதற்கான ஏற்பாடுகளை மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு பணியாளர்கள் மற்றும் சட்ட தன்னார்வலர்கள் செய்திருந்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்