குரூப்-2 தேர்வை 16,312 பேர் எழுதுகின்றனர்

திருவாரூர் மாவட்டத்தில் குரூப்-2 தேர்வை 16,312 பேர் எழுதுகின்றனர் என கலெக்டர் காயத்ரி கிருஷ்ணன் கூறினார்.

Update: 2022-05-19 18:20 GMT

திருவாரூர்,:

குரூப்-2 தேர்வு

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் சார்பில், நாளை(சனிக்கிழமை) குரூப்-2 ேதர்வு தமிழகம் முழுவதும் நடக்கிறது. திருவாரூர் மாவட்டத்தில் இந்த தேர்வை 16,312 பேர் எழுதுகின்றனர்.இதுெதாடர்பான முன்னேற்பாடு கூட்டம் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நேற்று நடந்தது. கூட்டத்திற்கு மாவட்ட கலெக்டர் காயத்ரி கிருஷ்ணன் தலைமை தாங்கினார்.

அப்போது அவர் கூறியதாவது:-

திருவாரூர் மாவட்டத்தில் நாளை நடக்கும் குரூப்-2 தேர்வினை 16,132 பேர் எழுதுகின்றனர். திருவாரூர், மன்னார்குடி, திருத்துறைப்பூண்டி ஆகிய 3 மையங்களுக்குட்பட்ட 40 இடங்களில் 56 தேர்வு அறைகளில் தேர்வு நடக்கிறது.

பறக்கும் படை

தேர்வானது, காலை 9.30 மணி முதல் மதியம் 12.30 மணி வரை நடைபெறவுள்ளது. தேர்வை கண்காணிக்கவும், முறைகேடுகளில் ஈடுபடுவர்களை கண்டறியவும் 56 முதன்மை கண்காணிப்பாளர்களும், 12 நடமாடும் கண்காணிப்பு குழுக்களும், 4 பறக்கும் படைகளும், 112 ஆய்வு அலுவலர்களும், 56 வீடியோ ஒளிப்பதிவாளர்களும் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

இவ்வாறு அவர் கூறினார்.

கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலர் சிதம்பரம், தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தின் பிரிவு அலுவலர் ஜெயமுருகன், உதவி பிரிவு அலுவலர்கள் பகீம், பிரபு உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்