ராமநாதபுரத்தில் இன்று நள்ளிரவு முதல் அக்டோபர் 31-ம் தேதி வரை 144 தடை உத்தரவு - கலெக்டர் அறிவிப்பு

ராமநாதபுரத்தில் இன்று நள்ளிரவு முதல் அக்டோபர் 31-ம் தேதி வரை 144 தடை உத்தரவு பிறப்பித்து கலெக்டர் அறிவித்துள்ளார்.

Update: 2022-09-08 12:45 GMT

ராமநாதபுரம்,

இமானுவேல் சேகரன் நினைவு தினம் மற்றும் முத்துராமலிங்க தேவர் குருபூஜை முன்னிட்டு சட்டம் ஒழுங்கை பாதுகாப்பதற்காக ராமநாதபுரம் மாவட்டத்தில் இன்று (செப்., 8) நள்ளிரவு முதல் அக்டோபர் 31 வரை 2 மாதங்களுக்கு 144 தடை உத்தரவு பிறப்பித்து அம்மாவட்ட கலெக்டர் ஜானி டாம் வர்க்கீஸ் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

இதனால் வெளிமாவட்டத்தை சேர்ந்த வாடகை வாகனங்கள் ராமநாதபுரம் மாவட்டத்தில் உரிய அனுமதியின்றி நுழைய தடை விதிக்கப்பட்டுள்ளது.

பாதுகாப்பு அச்சுறுத்தல் அல்லது கலவரத்தின் அவசர நிலைகளில், குற்றவியல் நடைமுறைச் சட்டத்தின் (சிஆர்பிசி) பிரிவு 144 தடை உத்தரவு அமல்படுத்தப்படுகிறது. பிரிவு 144 நடைமுறைப்படுப்பட்ட பகுதியில் ஐந்து அல்லது அதற்கு மேற்பட்ட நபர்கள் பொது இடத்தில் கூட கூடாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்