நாமக்கல்லுக்கு வந்த சரக்கு ரெயிலில் 1,400 டன் கடுகு புண்ணாக்கு

நாமக்கல்லுக்கு சரக்கு ரெயிலில் 1,400 டன் கடுகு புண்ணாக்கு வந்தது

Update: 2023-06-27 18:45 GMT

நாமக்கல் மாவட்டத்தில் உள்ள கோழிப்பண்ணைகளுக்கு தேவையான மூலப்பொருட்கள் வடமாநிலங்களில் இருந்து சரக்கு ரெயில் மூலம் வாங்கி வரப்படுகின்றன. அந்த வகையில் நேற்று மத்திய பிரதேசத்தில் இருந்து 1,400 டன் கடுகு புண்ணாக்கு சரக்கு ரெயிலில் நாமக்கல் கொண்டு வரப்பட்டன. இவை 100-க்கும் மேற்பட்ட லாரிகளில் ஏற்றப்பட்டு, கோழித்தீவன ஆலைகளுக்கு கொண்டு செல்லப்பட்டன.

இதே ரெயிலில் 1,000 டன் நெல் மூட்டைகளும் கொண்டு வரப்பட்டன. இவை மாவட்டத்தில் உள்ள அரிசி ஆலைகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டன. ஒரே ரெயிலில் 22 வேகன்களில் கடுகு புண்ணாக்கும், 21 வேகன்களில் நெல் மூட்டைகளும் கொண்டு வரப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Tags:    

மேலும் செய்திகள்