1,330 திருக்குறள் ஒப்புவிக்கும்மாணவ-மாணவிகளுக்கு பரிசு

தமிழ்வளர்ச்சித்துறை 1,330 திருக்குறள் ஒப்புவிக்கும் மாணவ-மாணவிகளுக்கு பரிசு வழங்குகிறது;

Update:2023-09-29 04:39 IST

உலக பொதுமறையாம் திருக்குறளில் உள்ள கருத்துக்களை பள்ளிக்கூட மாணவ-மாணவிகள் இளம் வயதிலேயே அறிந்து கொண்டு கல்வியறிவோடு நல்லொழுக்கம் மிக்கவர்களாக விளங்கும் வகையில், தமிழக அரசால் திருக்குறள் முற்றோதல் பாராட்டு பரிசு திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது. இந்த திட்டத்தின் கீழ் 1,330 திருக்குறள்களை ஒப்புவிக்கும் பள்ளிக்கூட மாணவ-மாணவிகளுக்கு தலா ரூ.25 ஆயிரம் பரிசாக தமிழ் வளர்ச்சித்துறையால் ஆண்டுதோறும் வழங்கப்பட்டு வருகிறது. அதன்படி இந்த நிதி ஆண்டுக்கான திருக்குறள் முற்றோதல் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

ஈரோடு மாவட்டத்தில் உள்ள 1,330 குறட்பாக்களையும் ஒப்புவிக்கும் திறன்கொண்ட மாணவ-மாணவிகள் திருக்குறள் முற்றோதல் விண்ணப்பத்தினை அந்தந்த பள்ளிக்கூட தலைமை ஆசிரியரிடம் இருந்து பெற்றுக்கொள்ளலாம். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்தினை வருகிற அக்டோபர் மாதம் 31-ந்தேதிக்குள் ஈரோடு மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ள தமிழ் வளர்ச்சி துணை இயக்குனர் அலுவலகத்தில் நேரில் வழங்க வேண்டும். இந்த தகவலை கலெக்டர் ராஜகோபால் சுன்கரா தெரிவித்துள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்