தூத்துக்குடி அருகே வீட்டின் பூட்டை உடைத்து 111 சவரன் நகை கொள்ளை
ஆழ்வார்திருநகரி அருகே 111 சவரன் நகை, ரூ.20 ஆயிரம் பணத்தை வீடு புகுந்து கொள்ளையடித்து சென்ற மர்மநபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.;
தூத்துக்குடி,
தூத்துக்குடி மாவட்டம் ஆழ்வார்திருநகரி கேம்பாலபாத் இரண்டாவது தெருவை சேர்ந்தவர் சபீனா. இவரது கணவர் வெளிநாட்டில் பணிபுரிந்து வரும் நிலையில், சபீனா தனது குழந்தைகள் மற்றும் தாயாருடன் தனியே வசித்து வந்துள்ளார்.
இந்த நிலையில் சம்பவத்தன்று உறவினரின் வீட்டுக்கு சென்று விட்டு வீடு திரும்பிய சபீனா வீட்டின் கதவு உடைக்கப்பட்டு பீரோவில் இருந்து 111 சவரன் தங்க நகைகள் மற்றும் ரூ.20 ஆயிரம் பணம் கொள்ளை அடிக்கப்பட்டது அறிந்து பெரும் அதிர்ச்சியடைந்தார்.
இதையடுத்து புகாரின் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் கைரேகை நிபுணர்களின் உதவியுடன் தடயங்களை சேகரித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், மோப்ப நாய்கள் மூலம் கொள்ளையர்களை தேடி வருகின்றனர்.