நீடாமங்கலம்
திருவாரூர் மாவட்டம் ஆதனூர், மூவாநல்லூர், தெற்குநத்தம், அசேஷம், பெருகவாழ்ந்தான், அரவத்தூர் ஆகிய திறந்தவெளி சேமிப்பு கிடங்குகளில் இருப்பு வைக்கப்பட்டிருந்த ஆயிரம் டன் பொதுரக நெல் 78 லாரிகளில் நீடாமங்கலம் ெரயில் நிலையத்திற்கு கொண்டு வரப்பட்டது. பின்னர் சுமைதூக்கும் தொழிலாளர்கள் நெல் மூட்டைகளை சரக்கு ெரயிலின் 21 பெட்டிகளில் ஏற்றினர். அதனை தொடர்ந்து நெல் அரவைக்காக சிவகங்கைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.