100 நாள் வேலை திட்ட தொழிலாளர்கள் முற்றுகை
100 நாள் வேலை திட்ட தொழிலாளர்கள் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர்.
பெரம்பலூர் மாவட்டம், ஆலத்தூர் தாலுகா, இரூர் கிராமத்தை சோ்ந்த 100 நாள் வேலை திட்ட தொழிலாளர்கள் நேற்று காலை வருகை பதிவேடு வராததால் ஆலத்தூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை முற்றுகையிட்டனர். இதையடுத்து, சம்பந்தப்பட்ட அலுவலர்களும், பாடாலூர் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தியதில் உடன்பாடு ஏற்பட்டதால் அவர்கள் முற்றுகையை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.