லாட்டரி விற்ற 2 பேர் கைது

நாகர்கோவிலில் லாட்டரி விற்ற 2 பேர் கைது

Update: 2023-06-22 18:45 GMT

நாகர்கோவில், 

நாகர்கோவில் வடசேரி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சுந்தர்சிங் மற்றும் போலீசார் நேற்று மதியம் கிருஷ்ணன்கோவில் கிராம நிர்வாக அலுவலகம் அருகில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அங்கு லாட்டரி விற்றுக் கொண்டிருந்த அறுகுவிளை பகுதியை சேர்ந்த மணிகண்டன் (வயது 42), சுரேஷ் (36) ஆகிய 2 பேரையும் பிடித்து விசாரணை செய்தனர். விசாரணையில் கேரள மாநில பம்பர் லாட்டரி விற்பனை செய்தது தெரிய வந்தது. அவர்களிடம் இருந்து 6 லாட்டரி சீட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டது. இதையடுத்து அவர்கள் 2 பேரையும் போலீசார் கைது செய்து, பின்னர் ஜாமீனில் விடுவித்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்