வடலூர் பகுதியில் இன்று மின்நிறுத்தம்
வடலூர் பகுதியில் இன்று மின்நிறுத்தம் செய்யப்படுகிறது.
குறிஞ்சிப்பாடி,
வடக்குத்து துணை மின் நிலையத்தில் இன்று (செவ்வாய்க்கிழமை) பராமரிப்பு பணி நடைபெற உள்ளது. இதன் காரணமாக இன்று காலை 10 மணி முதல் மதியம் 1 மணி வரை வடலூர் அம்மன் நகர், பி.பி.எஸ். நகர், கோவிந்தசாமி நகர், சேஷாயிநகர், வடலூர்-நெய்வேலி மெயின் ரோடு, வடலூர்-சிதம்பரம் மெயின் ரோடு, இந்திரா நகர், காமராஜர் நகர், காந்திநகர், பவுனாம்பாள் நகர், பி.டி.ஆர். நகர் உள்ளிட்ட பகுதிகளில் மின் வினியோகம் நிறுத்தப்படும். இந்த தகவலை குறிஞ்சிப்பாடி மின் வாரிய செயற்பொறியாளர் கண்ணகி தெரிவித்துள்ளார்.