ஜியோமி ஸ்மார்ட் ஏர் பிரையர்
மின்னணு சாதனங்களைத் தயாரிக்கும் சீனாவைச் சேர்ந்த ஜியோமி நிறுவனம் ஸ்மார்ட் ஏர் பிரையரை அறிமுகம் செய்துள்ளது.
இது 3.5 லிட்டர் கொள்ளளவு கொண்டது. இதில் ஓலெட்டி ஸ்பிளே உள்ளதால், உணவுப் பொருட்கள் தயாராக எடுத்துக் கொள்ளும் நேரத்தைக் கண்காணிக்க முடியும். இத்துடன் சமைப்பதற்கான 50-க்கும் மேலான சமையல் குறிப்புகள் இதன் செயலியில் உள்ளது. கூகுள் அசிஸ்டென்ட் மூலமான குரல் வழி கட்டுப்பாட்டிலும் செயல்படும். இது 1,500 வாட் வெப்பத்தை வெளியிடும்.
இதில் 40 டிகிரி சென்டி கிரேடு முதல் 200 டிகிரி சென்டி கிரேடு வரையிலான வெப்பத்தில் உணவுப் பொருட்களை சமைக்க முடியும். 24 மணி நேரத்துக்கு முன்பாகவே சமைக்க வேண்டிய உணவுப் பொருள் குறித்த தகவலை பதிவு செய்தால் உரிய நேரத்தில் சமையல் செய்துவிடும்.
இதில் உள்ள இரண்டு பேன் மற்றும் ஸ்மார்ட் ஏர் பிரையர் மூலம் உறைநிலையில் உள்ள உணவுப் பொருட்களையும் எளிதில் சமைக்க முடியும். நான் ஸ்டிக் உள்பகுதி இருப்பதால் உணவுப் பொருட்கள் தீய்ந்து போகாது. குறைவான எண்ணெய்யில் சுவையான உணவுகளைத் தயாரிக்க முடியும். இதை சுத்தம் செய்வதும் எளிது. இதன் விற்பனையக விலை சுமார் ரூ.9,999.