உலகின் ஆபத்தான நகரங்கள்

காபூல் நகரத்தை விட உயிர் வாழ ஆபத்து மிகுந்த நகரங்கள் உலகில் நிறைய இருக்கின்றன.

Update: 2022-10-09 12:52 GMT

தலீபான்கள் ஆப்கானிஸ்தானை கைப்பற்றியபோது அங்கு நிலவிய அரசியல் அமைதியின்மை, தனி மனித சுதந்திரம் மீதான நம்பிக்கையின்மை, மனித உரிமை நிலைநாட்டப்படுவதில் ஏற்பட்ட சிக்கல் காரணமாக காபூல் நகரம் உலகின் மோசமான இடங்களில் ஒன்றாக குறிப்பிடப்பட்டது. ஆனால்

அங்கு கொலை, கொள்ளை போன்ற குற்றச்செயல்கள் அதிகம் நிகழ்கின்றன. அங்கு வசிப்பவர்களின் பாதுகாப்பு கேள்விக்குறியாக இருக்கிறது. அப்படிப்பட்ட நகரங்களின் பட்டியலை பொது பாதுகாப்பு மற்றும் குற்றவியல் நீதிக்கான குடிமக்கள் கவுன்சில் தயாரித்துள்ளது. அவற்றுள் உலகின் மிக ஆபத்தான லத்தின் அமெரிக்க நகரங்கள் சிலவற்றை பார்ப்போம்.

டிஜுவானா (மெக்சிகோ): உலகின் மிக ஆபத்தான நகரமாக கருதப்படுகிறது. இங்கு நிலவும் வறுமை அங்கு வசிக்கும் பலரின் வாழ்வாதாரத்தை கேள்விக்குறியாக்கி உள்ளது. அதனால் குற்றச்செயல்கள் அதிகம் நடக்கின்றன. கற்பழிப்பு, கொலை மற்றும் கடத்தல் போன்ற குற்றங்கள் சர்வசாதாரணமாக நிகழ்கின்றன.

அதிலும் ஆட்களை கடத்தல் மற்றும் போதைப்பொருள் வர்த்தகம் அதிகம் நடக்கிறது. இந்த நகரத்தின் மக்கள் தொகை: 20 லட்சத்து 49 ஆயிரத்து 413 பேர். இங்கு வசிக்கும் 1 லட்சம் பேருக்கு 138 பேர் என்ற வீதத்தில் கொலை வழக்கு பதிவாகிறது.

அகாபுல்கோ(மெக்சிகோ): ஹாலிவுட் சினிமா படங்களில் காண்பிக்கப்படும் நகர வடிவமைப்பை கொண்டிருக்கிறது. இங்கு ஹாலிவுட் படங்களின் ஷூட்டிங் நடைபெற்றுள்ளது. சுற்றுலா நகரமாகவும் விளங்குகிறது. ஆனால் குற்ற செயல்கள் அதிகம் நடைபெறும் இடமாகவும் உள்ளது.

மலை பாங்கான பகுதிகளில் பதுங்கி இருந்து 200-க்கும் மேற்பட்ட கும்பல்கள் வன்முறையை அரங்கேற்றுகின்றன. இந்த நகரத்தின் மக்கள் தொகை: 7 லட்சத்து 79 ஆயிரத்து 566. ஒரு லட்சம் பேருக்கு 111 என்ற வீதத்தில் கொலைகள் நடக்கின்றன.

குயிடேட் ஜுரேஜ் (மெக்சிகோ): இரவு நேர கேளிக்கை விருந்துகள், கொண்டாட்டங்கள் அரங்கேறும் நகரம் இது. அதனால் பிரலபமான சுற்றுலா தலமாக விளங்கியது. இப்போது பெண்களுக்கு மிகவும் பாதுகாப்பற்ற நகரமாக உள்ளது. வன்முறை சம்பவங்கள் அடிக்கடி நிகழ்கின்றன. குறிப்பாக அமெரிக்கர்கள் குறிவைக்கப்படுகிறார்கள்.

கராகஸ் (வெனிசுலா): இந்த நரகத்தின் மக்கள் தொகை, 26 லட்சத்து 82 ஆயிரத்து 801. இங்கு ஒரு லட்சம் பேருக்கு 100 என்ற ரீதியில் கொலைகள் அரங்கேறுகிறது. ஏற்கனவே 2017-ம் ஆண்டு உலகின் மிக ஆபத்தான நகரமாக அறிவிக்கப்பட்டது.

5 ஆண்டுகளுக்குப் பிறகு, உலகின் மிக ஆபத்தான முதல் மூன்று இடங்களின் பட்டியலில் இடம் பிடித்திருக்கிறது. வறுமை, வேலையின்மை, சட்டத்தை மீறி நடக்கும் குற்ற செயல்கள் இந்த நகரத்தை உலகின் மிக மோசமான நகரங்களில் ஒன்றாக மாற்றிவிட்டது.

சியுடாட் விக்டோரியா (மெக்சிகோ): மெக்சிகோவையொட்டிய நகரங்களில் மிகவும் ஆபத்தான நகரங்களில் இதுவும் ஒன்றாகும். போதைப்பொருள் வர்த்தகம் உச்சத்தில் இருக்கிறது. போதை கும்பல்களுக்கு இடையே அடிக்கடி மோதல் அரங்கேறும்.

சில சமயங்களில் போலீசாருக்கும், போதை கும்பல்களுக்கும் இடையே துப்பாக்கி சண்டையும் நிகழும். அதனால் உயிரிழப்பு அடிக்கடி நிகழும். குற்ற செயல்களில் ஈடுபட்டு சிறையில் அடைக்கப்படுபவர்கள் அங்கும் மோதலில் ஈடுபடுவார்கள். இந்த நகரத்தின் மக்கள் தொகை: 3 லட்சத்து 49 ஆயிரத்து 688. கொலை விகிதம்: 1 லட்சம் பேருக்கு 86.

Tags:    

மேலும் செய்திகள்