உலகின் மிகப் பெரிய விமானம் ஏர் பஸ் ஏ-380
உலகின் மிகப்பெரிய பயணிகள் விமானம் ஏர் பஸ் ஏ-380. இது பிரான்ஸ் நாட்டின் ஏர் பஸ் நிறுவன தயாரிப்பாகும்.
இந்த ஏர் பஸ் விமானத்தில் ஒரே நேரத்தில் சுமாராக 600 பயணிகள் பயணிக்க முடியும். மொத்தம் நான்கு என்ஜின்கள் செயல்படுகின்றன. அதில் இரண்டு என்ஜின்கள் மட்டுமே விமானம் தரையிறங்கும் பொழுது செயல்பாட்டில் இருக்கும். 'போயிங்' ரக விமானங்களுக்கு போட்டியாக தயாரிக்கப்பட்டதே 'ஏர் பஸ் 380' ரக விமானங்கள்.
580 டன்கள் எடை கொண்ட ஏர் பஸ் விமானம், அதிகபட்சமாக 40 ஆயிரம் அடி உயரத்தில் பறக்கும் திறன் கொண்டது. 'சூப்பர் ஜம்போ' ரக விமானங்கள் என்றழைக்கப்படும் இவற்றை எல்லா ஓடுபாதைகளிலும் தரையிறக்க முடியாது. அதற்காக வடிவமைக்கப்பட்ட விமான ஓடுதளங்களில் மட்டுமே தரையிறக்க முடியும். டெல்லி, மும்பை, ஐதராபாத், பெங்களூரு போன்ற நகரங்களில் உள்ள சர்வதேச விமான நிலையங்களில் மட்டுமே இந்த வகை விமானங்களை தரைஇறக்குவதற்கான ஓடுதளங்கள் உள்ளன.