அல்ட்ரா வயலட் மோட்டார் சைக்கிள்

டி.வி.எஸ். மோட்டார்ஸ் நிறுவனத்தின் பின்புலத்தில் பெங்களூருவைச் சேர்ந்த ஸ்டார்ட் அப் நிறுவனம் உருவாக்கியுள்ள அல்ட்ரா வயலட் மோட்டார் சைக்கிள் எப் 77 அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

Update: 2022-12-08 08:58 GMT

இதில் மூன்று வேரியன்ட்கள் அறிமுகமாகின்றன. இவற்றின் விலை சுமார் ரூ.3.80 லட்சம் முதல் ரூ.5.50 லட்சம். எப் 77 ஒரிஜினல், எப் 77 ரெகான் மற்றும் எப் 77 லிமிடெட் எடிஷன் என மூன்று மாடல்கள் வந்துள்ளன. இதில் லிமிடெட் எடிஷனில் மொத்தமே 77 மோட்டார் சைக்கிள் மட்டுமே தயாரிக்கப்படும் என இந் நிறுவனம் தெரிவித்துள்ளது.

பேட்டரியில் இயங்கும் வகையிலான இந்த மோட்டார் சைக்கிள் ஒரு முறை சார்ஜ் செய்தால் அதிகபட்சம் 307 கி.மீ. தூரம் வரை ஓடக் கூடியது. எப் 77 மாடலில் 7.1 கிலோவாட் அவர் பேட்டரியும், எப் 77 ரெகான் மாடலில் 10.3 கிலோவாட் அவர் பேட்டரியும், எப் 77 லிமிடெட் மாடலில் 10.3 கிலோவாட் அவர் பேட்டரியும் பயன் படுத்தப்பட்டுள்ளது. எப் 77 மாடல் 85 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையும் அதிக பட்சம் ஓடும் தூரம் 205 கி.மீ. ஆகவும் உள்ளது. எப் 77 ரெகான் மாடல் மற்றும் எப் 77 லிமிடெட் எடிஷன் மாடல்கள் அதிகபட்சம் 307 கி.மீ. தூரம் வரை ஓடக் கூடியவையாகும்.

இதேபோல எப் 77 மாடலின் அதிகபட்ச வேகம் மணிக்கு 140 கி.மீ. ஆகவும், எப் 77 ரெகான் மாடல் மணிக்கு 147 கி.மீ. ஆகவும், லிமிடெட் எடிஷன் மணிக்கு 152 கி.மீ. வேகத்திலும் சீறிப்பாயக் கூடியதாக வடிவமைக்கப்பட்டுள்ளது. லிமிடெட் எடிஷனில் மட்டும் மிகப்பெரிய அளவிலான பேட்டரி பயன் படுத்தப்பட்டுள்ளது.

இரு சக்கர வாகனங்களில் இந்த அளவு பெரிய பேட்டரி இந்த மோட்டார் சைக்கிளில் மட்டுமே உள்ளது. இது 40.5 பி.ஹெச்.பி. திறனை வெளிப்படுத்தக் கூடியது. மூன்று விதமான ஓட்டும் நிலைகள் இதில் உள்ளன. 7.8 விநாடிகளில் 152 கி.மீ. வேகத்தை எட்டிவிடும்.

யு.எஸ்.டி. முன்புற போர்க் மற்றும் பின்புறம் மோனோ ஷாக் அப்சார் பரைக் கொண்டுள்ளது. இரு சக்கரங்களுக்கும் டிஸ்க் பிரேக் பயன்படுத்தப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்