ஆஸ்திரேலியாவில் சிறந்த சர்வதேச மாணவர்களுக்கான "விக்டோரியன் பிரீமியர் விருதை'' வென்ற இந்திய மாணவிகள்!

ஆஸ்திரேலியாவில் பயின்று வரும் இரண்டு இந்திய மாணவிகள் மதிப்புமிக்க விக்டோரியன் பிரீமியர் விருதை வென்றுள்ளனர்.

Update: 2022-10-07 08:07 GMT

மெல்போர்ன்,

ஆஸ்திரேலியாவில் பயின்று வரும் இரண்டு இந்திய மாணவிகள் மதிப்புமிக்க விக்டோரியன் பிரீமியர் விருதை வென்றுள்ளனர்.

ஆஸ்திரேலியாவின் விக்டோரியா மாநிலத்தில் பயின்று வரும் வெளிநடுகளை சேர்ந்த சர்வதேச மாணவர்களை ஊக்குவிக்கும் வகையில் 'விக்டோரியன் பிரீமியர் விருதுகள்' வழங்கப்படுகின்றன. இது விக்டோரியாவில் உள்ள சிறந்த சர்வதேச மாணவர்களைக் கொண்டாட விக்டோரியா அரசாங்கத்தின் முன்முயற்சியாகும்.

விக்டோரியாவில் கல்வி பயின்று வரும் இந்திய மாணவிகள் திவ்யங்கனா சர்மா மற்றும் ரித்திகா சக்சேனா ஆகிய இருவரும் சிறந்த சர்வதேச மாணவர் விருதை வென்றுள்ளனர்.

'விக்டோரியன் பிரீமியர் விருதுகள்' பிரிவில், ஒவ்வொரு மாணவர் பிரிவிலும் விருது வென்றவர்களுக்கு அவர்களின் படிப்புக்கு உதவுவதற்காக ஒவ்வொருவருக்கும் 6,000 அமெரிக்க டாலர்கள் பரிசுத்தொகையும் வழங்கப்படுகிறது.

அதில் பிரீமியர் பிரிவில் விருது வென்றவர்களுக்கு அதிகபட்ச பரிசுத்தொகையாக 10,000 அமெரிக்க டாலர்களும், ஒவ்வொரு மாணவர் பிரிவிலும 2ஆம் இடம் பெறுபவருக்கு 2000 அமெரிக்க டாலர்களும் வழங்கப்படுகிறது.

'2021-22 ஆம் ஆண்டின் சர்வதேச மாணவர்' என்ற விக்டோரியன் பிரீமியர் விருதை மாணவி திவ்யங்கனா ஷர்மா வென்றுள்ளார். திவ்யங்கனா உயர்கல்வி பிரிவில், '2021-22 விக்டோரியன் சர்வதேச கல்வி விருதுகளையும்' வென்றுள்ளார். அவர் பிப்ரவரி 2020இல் ஹோம்ஸ்கிலன் நிறுவனத்தில் நர்சிங் படிக்க மெல்போர்னுக்கு சென்றவர் ஆவார்.

ஆராய்ச்சி பிரிவில், '2021-22 ஆம் ஆண்டின் சிறந்த சர்வதேச மாணவர் விருது' மாணவி ரித்திகா சக்சேனாவுக்கு வழங்கப்பட்டுள்ளது. ரித்திகா தன்னுடைய 18 வயதில் மெல்போர்னுக்கு குடிபெயர்ந்து, இப்போது ஆராய்ச்சி பிரிவில் முனைவர் பட்டம் பயின்று வருகிறார்.

Tags:    

மேலும் செய்திகள்