டி.வி.எஸ். ரோனின்
இருசக்கர வாகன உற்பத்தியில் பிரபலமாகத் திகழும் டி.வி.எஸ். மோட்டார் நிறுவனம் புதிதாக ரோனின் என்ற பிரீமியம் மாடல் மோட்டார் சைக்கிளை அறிமுகம் செய்துள்ளது.
இளைஞர்களைக் கவரும் வகையில் இது வடிவமைக்கப் பட்டுள்ளது. நவீன தொழில்நுட்பம் மற்றும் சிறப்பான வடி வமைப்பு கொண்ட கலவையாக இது விளங்குகிறது. இதன் விற்பனையக விலை சுமார் ரூ.1.49 லட்சம்.
225 சி.சி. திறன் கொண்ட இந்த மோட்டார் சைக்கிளில் 3 வேரியன்ட்கள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன. பேஸ் பிளஸ் மாடல் விலை சுமார் ரூ.1.56 லட்சம், மிட் மாடல் விலை சுமார் ரூ.1.69 லட்சம் முதல் சுமார் ரூ.1.71 லட்சமாகவும் நிர்ணயிக்கப் பட்டுள்ளது. கருப்பு, சிவப்பு மற்றும் டெல்டா நீலம் உள்ளிட்ட நிறங்களில் இது வந்துள்ளது. பிரீமியம் மாடலில் கிளாக்டிக் கிரே, டான் ஆரஞ்சு வண்ண மாடல்கள் கிடைக்கும். எல்.இ.டி. முகப்பு விளக்கு, யு.எஸ்.பி. சார்ஜர், டி.வி.எஸ். ஸ்மார்ட் எக்ஸோனெக்ட் புளூடூத் இணைப்பு வசதி ஆகியன உள்ளன. குரல் வழி கட்டுப்பாட்டு வசதி கொண்டது.
ஸ்லிப்பர் கிளட்ச் வசதி மற்றும் நான்கு வால்வு ஒற்றை சிலிண்டர் என்ஜினைக் கொண்டது. இது 204 ஹெச்.பி. திறனை 7,750 ஆர்.பி.எம். சுழற்சியிலும், 19.93 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை 3,750 ஆர்.பி.எம். சுழற்சியிலும் வெளிப்படுத்தும். இது 5 கியர்களைக் கொண்டதாக வந்துள்ளது. 41 மி.மீ. அளவிலான யு.எஸ்.டி. ஷோவா போர்க் மற்றும் கேஸ் நிரப்பப்பட்ட மோனோ ஷாக் அப்சார்பரைக் கொண்டதாக இது உருவாக்கப்பட்டுள்ளது. அலாய் சக்கரம் கொண்டது. இதன் எடை 160 கி.கி. ஆகும்.