விலங்குகளிடமிருந்து பெறப்படும் பாலில் இருந்து மனிதர்களுக்கு காசநோய் பரவும் அபாயம்!

காசநோய் மனிதர்களிடமிருந்து விலங்குகளுக்கும், அதே போல, விலங்குகளிடமிருந்து மனிதர்களுக்கும் பரவும் என்பது தெரிய வந்துள்ளது.

Update: 2022-07-05 12:39 GMT

சென்னை,

காசநோய் மனிதர்களிடமிருந்து விலங்குகளுக்கும், அதே போல, விலங்குகளிடமிருந்து மனிதர்களுக்கும் பரவும் என்பது தெரிய வந்துள்ளது.

சென்னையில் உள்ள காசநோய்க்கான தேசிய ஆராய்ச்சி நிறுவனம் (என்ஐஆர்டி) மற்றும் இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் (ஐசிஎம்ஆர்) ஆராய்ச்சியாளர்கள் இதனை கண்டுபிடித்துள்ளனர்.

ஐசிஎம்ஆர்-என்ஐஆர்டியின் டாக்டர் எஸ் ஸ்ரீராம் கூறுகையில், விலங்குகளிடம் இருந்து மனிதர்களுக்கு காசநோய் பரவுவதற்கான சாத்தியக்கூறுகள் மற்றும் சான்றுகள் உள்ளன.

விலங்கு கையாளுபவர்கள் மற்றும் விலங்குகளில் காசநோய்க்கு காரணமான மைக்கோபாக்டீரியம் இருப்பதைக் கண்டறிந்துள்ளோம்.


காசநோயாளிகளிடமிருந்து உருவாகும் எச்சில் துளிகள், சளி மூலம் காசநோய் பரவுகிறது, ஏனெனில் இது காற்றில் பரவும் நோயாகும். காசநோய் நோயாளி இருமல் அல்லது தும்மும்போது, அல்லது பேசும்போது, அல்லது பாடும்போது, மூக்கு மற்றும் வாய்வழி ஏராளமான ஏரோசோல்கள் உருவாகின்றன. அவை வெளியேற்றப்பட்டு விலங்குகள் உட்பட பல்வேறு உயிரினங்களுக்கு பரவ காரணமாகிறது.

கால்நடைகள் போன்ற விலங்குகள் அல்லது இந்த ஏரோசோல்களுக்கு வெளிப்படும் மற்ற வீட்டு விலங்குகள், காசநோயால் பாதிக்கப்படும் வாய்ப்பு உள்ளது.

பாதிக்கப்பட்ட விலங்குகளிடமிருந்து இதுவரை பாதிக்கப்படாத மனிதர்களுக்கு பரவுவதற்கான ஆதாரங்களை நாங்கள் ஆவணப்படுத்தியுள்ளோம்.

சென்னையில் உள்ள கால்நடைகளை கையாள்பவர்களிடம் நாங்கள் ஆய்வு செய்தோம். அங்கு விலங்குகளுக்கு மைக்கோபாக்டீரியம் இருப்பதாகவும், இறைச்சிக் கூடங்களில் பணிபுரியும் விலங்குகளை கையாள்பவர்களுக்கும் இதே போன்ற பாதிப்பு இருப்பதை கண்டறிந்துள்ளோம்.

எனவே, இது மனிதர்களுக்கும் விலங்குகளுக்கும் இடையில் நடக்கும் பரிமாற்றத்திற்கான ஆதாரத்தை அளிக்கிறது.


பாஸ்டுரைசேஷன் அல்லது பதப்படுத்தப்படாத பாலில் இருந்து மைக்கோபாக்டீரியம் காசநோய் தொற்று ஏற்பட வாய்ப்பு உள்ளது.

ஒரு விலங்குக்கு காசநோய் தொற்று இருந்தால், அதிலிருந்து கிடைக்கும் பால் மாதிரிகளுக்கு மைக்கோபாக்டீரியம் காசநோய் பரவும் வாய்ப்பு உள்ளது. பின்னர் அதை பதப்படுத்தப்படாமல்(பாஸ்டுரைசேஷன்) செய்யாமல் உட்கொண்டால், அவர்கள் காசநோய்க்கு ஆளாகும் அபாயம் உள்ளது.

அதனால்தான், பாஸ்டுரைசேஷன் செய்யப்பட்ட பாலை பயன்படுத்த பரிந்துரைக்கிறோம். மேலும் சில இடங்களில் கலாச்சாரம் மற்றும் பால்வளத்தால், மக்கள் இந்த நடைமுறைகளைப் பின்பற்றுவதில்லை.

2025 ஆம் ஆண்டிற்குள் காசநோயை ஒழிக்க மத்திய சுகாதார அமைச்சகத்தின் இலக்குகளில் சுற்றுச்சூழல் பற்றிய ஆராய்ச்சியும் அடங்கும்.யானைகள் போன்ற வனவிலங்குகளில் மைக்கோபாக்டீரியத்தை நாங்கள் கண்டறிந்ததற்கான சான்றுகள் நிறைய உள்ளன.

மேலும், விரிவான ஆராய்ச்சி மூலம் இந்த நோயை மனிதர்கள் மற்றும் விலங்குகள் உட்பட அனைத்து உயிர்களிடத்தில் இருந்தும் முற்றிலும் அகற்ற வேண்டும்.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Tags:    

மேலும் செய்திகள்