ரெட்ராகன் டிரைடன்ட் புரோ ரீசார்ஜபிள் மவுஸ்

கம்ப்யூட்டர் சார்ந்த மின்னணு உதிரி பாகங்களைத் தயாரிக்கும் ரெட்ராகன் நிறுவனம் டிரைடன்ட் புரோ எம் 693 என்ற பெயரில் ரீ சார்ஜபிள் மவுஸை அறிமுகம் செய்துள்ளது.;

Update:2023-03-23 19:25 IST

இது புளூடூத் இணைப்பு வசதி கொண்டது. இதில் உள்ள நினைவகத்தில் 7 விதமான செயல்களை சேமிக்கலாம். இது வீடியோகேம் விளையாடுவோருக்கு மிகவும் ஏற்றதாகும்.

இதில் 700 எம்.ஏ.ஹெச். திறன் கொண்ட ரீ சார்ஜபிள் பேட்டரி பயன்படுத்தப் பட்டுள்ளது. இதனால் இது தொடர்ந்து 35 மணி நேரம் செயல்படும். யு.எஸ்.பி. – சி கேபிள் மூலம் பேட்டரியை சார்ஜ் செய்ய முடியும். மெல்லிய தொடு உணர்தல் மூலம் இது செயல்படும். இதன் விலை சுமார் ரூ.2,290.

Tags:    

மேலும் செய்திகள்