மருத்துவ பணியாளர் பணி
தமிழ்நாடு அரசு மருத்துவ பணியாளர் தேர்வு வாரியம் சார்பில் மருத்துவமனையின் ஆபரேஷன் அறையில் பணிபுரியும் தியேட்டர் அசிஸ்டெண்ட் பணி இடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது. மொத்தம் 335 பேர் தேர்வு செய்யப்பட உள்ளனர்.;
3-2-2023 அன்றைய தேதிப்படி 12-ம் வகுப்பில் இயற்பியல், வேதியியல், தாவரவியல், விலங்கியல், உயிரியல் போன்ற அறிவியல் சார்ந்த பாடத்தை தேர்ந்தெடுத்து படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். அத்துடன் மாநில அல்லது மத்திய அரசால் அங்கீகரிக்கப்பட்ட மருத்துவ நிறுவனங்களில் ஒரு வருட தியேட்டர் டெக்னீசியன் சான்றிதழ் படிப்பும் படித்தவர்களாக இருக்க வேண்டும்.
1-7-2023 அன்றைய தேதிப்படி 18 வயதுக்கு மேற்பட்டவர்களாக இருக்க வேண்டும். மெரிட் லிஸ்ட், ஆவண சரிபார்ப்பு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பிக்க கடைசி தேதி: 23-2-2023.
விண்ணப்பிக்கும் விதம் பற்றிய விரிவான விவரங்களை தெரிந்து கொள்வதற்கு https://mrbonline.in/ என்ற இணையதளத்தை பார்வையிடலாம்.