மருத்துவர்களுக்கு பணி வாய்ப்பு

தமிழ்நாடு மருத்துவ பணியாளர் தேர்வாணையம் (எம்.ஆர்.பி) மூலம் 1,021 உதவி அறுவை சிகிச்சை நிபுணர் பணி இடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது.;

Update:2022-10-16 16:26 IST

எம்.பி.பி.எஸ். படித்தவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள். அத்துடன் 12 மாதங்களுக்கு குறையாமல் ஹவுஸ் சர்ஜனாக பணியாற்றி இருக்க வேண்டும்.

இந்த பணி நியமனத்துக்கு தமிழ் மொழித் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும். 1 மணி நேரம் நடைபெறும் அந்த தேர்வில் 50 மதிப்பெண்களுக்கு கேள்விகள் கேட்கப்படும். அதில் 40 சதவீதம் மதிப்பெண் பெற்று தேர்ச்சி பெறுவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. அதைத்தொடர்ந்து எழுத்து தேர்வு நடைபெறும்.

விண்ணப்பிக்க கடைசி தேதி: 25-10-2022. விண்ணப்பிப்பதற்கான வயது வரம்பு உள்ளிட்ட விரிவான விவரங்களை தெரிந்து கொள்வதற்கு https://www.mrb.tn.gov.in/ என்ற இணைய பக்கத்தை பார்வையிடலாம்.

Tags:    

மேலும் செய்திகள்