தாகம் எடுப்பது ஏன்?

தினமும் அதிக காரம் மற்றும் உப்பு அதிகமாக இருக்கும் உணவுகள் சாப்பிடுவது உங்களுக்கு அதிக தாகம் எடுப்பதற்கான காரணம் ஆகும்.

Update: 2022-09-16 13:22 GMT

நம் ரத்தத்தில் எப்போதும் ஒரு குறிப்பிட்ட அளவு நீரும், உப்பும் இருக்கும். சில காரணங்களால் இந்த அளவு நிலையில் மாறுபாடு ஏற்படுமானால், அப்போது திசுவில் பாயும் ரத்தம் தன் சமநிலையை சரிப்படுத்திக் கொள்ள, தேவையான நீரை திசுக்களில் இருந்து எடுத்துக் கொள்ளும். அந்த நிலையில் திசுக்களில் நீர் குறைந்ததை மூளையில் உள்ள தாக மையம் உணரும்.

உடனடியாக நரம்பு வழியாக தொண்டைக்கு செய்தி அனுப்பி தாகம் எடுக்கச் செய்யும். அதிகபட்சமாக இந்தத் தாகத்தை தணிக்காமல் சுமார் 2 மணிநேரம் வரை மூளையை ஏமாற்றலாம், அவ்வளவுதான்! அதற்கு மேல் தண்ணீர் பருகாமல் இருக்க முடியாது.

Tags:    

மேலும் செய்திகள்