இயற்கை நாப்கின் தயாரித்த பள்ளி மாணவிகள்

சானிட்டரி நாப்கின் கழிவுகளை அப்புறப்படுத்துவதில் ஏற்படும் பிரச்சினைகளுக்கு, தெலுங்கானா மாநிலம் முலக்கால்பள்ளி கிராமத்தைச் சேர்ந்த உயர்நிலைப் பள்ளி மாணவிகள் தீர்வு கண்டுள்ளனர்.

Update: 2022-09-18 08:33 GMT

நீர் பதுமராகம், மஞ்சள், வேம்பு, வெந்தயம் மற்றும் சப்ஜா விதைகளைக் கொண்டு, பலமுறைப் பயன்படுத்தும் நாப்கின்களைத் தயாரித்து அசத்தியுள்ளனர். இந்த நாப்கின்களுக்கு `ஸ்த்ரீ ரக்‌ஷா நாப்கின்' என்று பெயரிட்டுள்ளனர். இது குறித்து மாணவி சுவாதி, "நாப்கின் தயாரிக்க நாங்கள் பயன்படுத்தியுள்ள நீர் பதுமராகம் பழங்காலத்தில் பெண்கள் பயன்படுத்திய முறைதான். இதை சமகாலத்துக்கு ஏற்றவாறு தயாரிக்க நாங்கள் முடிவு செய்தோம். தற்போதுள்ள நாப்கின் அளவிலேயே புதிய நாப்கின்களை உருவாக்கியுள்ளோம். இவற்றுடன் இரண்டு காட்டன் பட்டைகளை வைத்து தைத்துள்ளோம்.

இதன்மூலம் சுகாதாரப் பாதிப்பை ஏற்படுத்தும் தற்போதைய நடைமுறையில் இருக்கும் நாப்கின் கழிவு களுக்குத் தீர்வு கிடைக்கும். நாங்கள் தயாரித்துள்ள நாப்கின்களை மறுமுறை பயன்படுத்தலாம்" என்றார்.

இயற்கைப் பொருட்களால் தயாரிக்கப்பட்ட இந்த நாப்கின்கள், மாதவிடாய் காலங்களில் பெண்களுக்குச் சுகாதாரமானதாக இருக்கும். மேலும், சந்தைகளில் குறைந்த விலையிலும் இத்தகைய நாப்கின்கள் கிடைக்கும் என்றும் மாணவிகள் கூறுகின்றனர்.

புதிய சுகாதாரமான நாப்கின்களைக் கண்டுபிடித்த மாணவி களுக்கு மேற்பார்வையாளராக இருந்த ஆசிரியை கல்யாணி பேசியபோது, ''சந்தைகளில் கிடைக்கும் ரசாயன அடிப்படையிலான நாப்கின்கள் ஆபத்தானவை. அதனால் புற்றுநோய், கருத்தரிப்பு பிரச்சினை, அரிப்பு போன்ற உபாதைகள் ஏற்படுகின்றன. இதற்கு மாற்றாக இயற்கைப் பொருட்களால் தயாரிக்கப்பட்டுள்ள 'ஸ்த்ரீ ரக்‌ஷா நாப்கின்' இருக்கும். இதை எங்கள் மாணவிகள் கண்டுபிடித்தது பெருமையாக இருக்கிறது" என்றார்.

Tags:    

மேலும் செய்திகள்