நெக்சான் எக்ஸ்.எம்.பிளஸ் (எஸ்)

டாடா மோட்டார்ஸ் நிறுவனம் தனது பிரபலமான நெக்சான் எஸ்.யு.வி. மாடல் காரில் புதிதாக எக்ஸ்.எம். பிளஸ் (எஸ்) மாடலை அறிமுகம் செய்துள்ளது.;

Update: 2022-07-28 12:09 GMT

இதன் விற்பனையக விலை சுமார் ரூ.9.75 லட்சம். வெள்ளை, கிரே, சிவப்பு, பச்சை உள்ளிட்ட கண்கவர் வண்ணங்களில் கிடைக்கும். இதில் திறந்து மூடும் வகையிலான மேற்கூரை, 7 அங்குல இன்போடெயின்மென்ட் சிஸ்டம், ஆண்ட்ராய்டு ஆடியோ, ஆப்பிள் கார் பிளே, 4 ஸ்பீக்கர் சிஸ்டம், பின்புறத்தி லும் ஏ.சி. வென்ட் வசதி, மழை உணர் வைபர், தானியங்கி முன்விளக்கு, டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டர் ஆகியன உள்ளன. பின்புறத்திலும் 12 வோல்ட் பவர் சாக்கெட் மற்றும் அழகிய சுறா மீன் துடுப்பு மாடல் போன்றவை உள்ளன.

டாடா மோட்டார்ஸின் நெக்சான் மாடல் அறிமுகம் செய்யப்பட்டதிலிருந்து இதுவரை 3.5 லட்சம் கார்கள் விற்பனையாகியுள்ளன. புதிய மாடல் இந்த விற்பனையை மேலும் அதிகரிக்க உதவும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இது 1,199 சி.சி. திறன் கொண்டது. இது 118.36 பி.ஹெச்.பி. திறனை 5,500 ஆர்.பி.எம். சுழற்சியிலும் 170 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்தும். 5 பேர் சவுகரியமாக பயணிக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்