சுஸுகி நியூ பர்க்மான் ஸ்ட்ரீட் இ.எக்ஸ்.
இரு சக்கர வாகனங்கள் தயாரிப்பில் முன்னிலை வகிக்கும் சுஸுகி மோட்டார் சைக்கிள் நிறுவனம் தனது பர்க்மான் ஸ்ட்ரீட் மாடலில் புதிய மேம்படுத்தப்பட்ட அம்சங்களை புகுத்தி அறிமுகம் செய்துள்ளது. இது 125 சி.சி. திறன் கொண்ட பிரீமியம் ஸ்கூட்டராகும்.;
இதில் சுற்றுச் சூழலுக்கு பாதிப்பை ஏற்படுத்தாத ஆல்பா என்ஜின் உள்ளது. தானியங்கி ஸ்டார்ட்-ஸ்டாப் வசதி மற்றும் சைலன்ட் ஸ்டார்ட் சிஸ்டம் கொண்டது. சிக்னலில் நிற்கும்போது ஆக்சிலரேட்டரை முற்றிலுமாக குறைத்தால் என்ஜின் இயக்கம் முழுவதுமாக நின்றுவிடும். அடுத்து சிக்னல் கிடைத்ததும் ஆக்சிலரேட்டரை திருகினாலே என்ஜின் ஸ்டார்ட் ஆகிவிடும்.
எல்.இ.டி. விளக்குகள் அதிக பிரகாசத்துடன் ஒளி வீசும் வகையில் வடிவமைப்பைக் கொண்டுள்ளன. ரைட் கனெக்ட் செயலி மூலம் வாகனத்தை இணைத்து அதை செயல் படுத்தலாம். ஸ்மார்ட்போனுக்கு வரும் அழைப்புகள் மற்றும் குறுஞ்செய்தி குறித்த விவரங்களையும் தெரிந்துகொள்ள முடியும்.
மெட்டாலிக் பிளாட்டினம் சில்வர், தங்கம் மற்றும் கருப்பு நிறங்களில் இது கிடைக்கும். இதன் விற்பனையக விலை சுமார் ரூ.1,12,300.