ஸ்டப்கூல் வயர்லெஸ் பவர்பேங்க்

ஸ்டப்கூல் நிறுவனம் புதிதாக வயர்லெஸ் பவர் பேங்கை அறிமுகம் செய்துள்ளது.;

Update:2022-12-22 19:49 IST

ஸ்மார்ட் போன் மற்றும் ஸ்மார்ட் கடிகாரங்களை இதில் சார்ஜ் செய்து கொள்ள முடியும். இதில் 5000 எம்.ஏ.ஹெச். திறன் கொண்ட பேட்டரி உள்ளது. தேவைப்பட்டால் வயர் இணைப்பு மூலமும் சார்ஜ் செய்யும் வசதிக்காக சி டைப் வயர் உள்ளது. இது காந்தப் புலன் மூலம் வயர்லெஸ் இணைப்பில் ஸ்மார்ட்போன் மற்றும் ஸ்மார்ட் கடிகாரம் சார்ஜ் ஏற வழி செய்கிறது.

ஆப்பிள் தயாரிப்பு சாதனங்களான ஏர்போட், ஆப்பிள் வாட்ச் உள்ளிட்டவற்றுக்கு மிகவும் ஏற்றது. அழகிய தோலினால் ஆன ஸ்டாண்ட் அளிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் ஸ்மார்ட்போன் சார்ஜ் ஆவதைப் பார்க்க முடியும். இந்திய தொழில்நுட்பத்தில் உள்நாட்டில் தயாரானது. பி.ஐ.எஸ். சான்று பெற்றது.

இதன் விலை சுமார் ரூ.3,999.

Tags:    

மேலும் செய்திகள்