ஸ்டப்கூல் நியோ சார்ஜர்
ஸ்டப்கூல் நிறுவனம் புதிதாக 40 வாட் திறன் கொண்ட நியோ சார்ஜரை அறிமுகம் செய்துள்ளது.;
ஒரே சமயத்தில் இரண்டு மின்னணு சாதனங்களை சார்ஜ் செய்யும் வகையில் இது உருவாக்கப்பட்டுள்ளது. விரைவாக சார்ஜ் ஆகும் வகையிலும் இது வடிவமைக்கப்பட்டுள்ளது. டைப் சி போர்ட் இணைப்பு வசதி கொண்டது. இது பி.ஐ.எஸ். சான்று பெற்ற உள்நாட்டு தயாரிப்பாகும். மின்னழுத்த வேறுபாடுகளைத் தாங்கும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது. வெள்ளை நிறத்தில் வந்துள்ள இந்த சார்ஜரின் விலை சுமார் ரூ.1,999.