ஸ்டாப் செலக்ஷன் கமிஷன் பணி

ஸ்டாப் செலக்‌ஷன் கமிஷன் (எஸ்.எஸ்.சி) மூலம் மொத்தம் 5,369 பணி இடங்கள் நிரப்பப்பட உள்ளன.

Update: 2023-03-12 15:52 GMT

ஸ்டாப் செலக்ஷன் கமிஷன் (எஸ்.எஸ்.சி) மூலம் ஜூனியர் என்ஜினீயர், கேண்டின் உதவியாளர், மானேஜர், டெக்னீஷியன், புகைப்பட கலைஞர், ரேடியோ மெக்கானிக், ஆடை வடிவமைப்பாளர், சமையல்காரர், டயட்டீஷியன், பல்தொழில் நுட்ப வல்லுநர், ஈ.சி.ஜி. உதவியாளர், டெக்னிக்கல் ஆபரேட்டர், நூலக உதவியாளர் உள்பட பல்வேறு பணி பிரிவுகளில் 5,369 பணி இடங்கள் நிரப்ப்பட உள்ளன.

கம்ப்யூட்டர் அடிப்படையிலான தேர்வு, திறன் தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். 10-ம் வகுப்பு, 12-ம் வகுப்பு, பட்டப்படிப்பு படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். தமிழகத்தை பொறுத்தவரை சென்னை, மதுரை, கோயம்புத்தூர், கிருஷ்ணகிரி, சேலம், திருச்சி, திருநெல்வேலி, வேலூர் ஆகிய இடங்களில் தேர்வு மையங்கள் அமைக்கப்படுகின்றன.

ஜூன், ஜூலை மாதங்களில் தேர்வு நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. விண்ணப்பிக்க கடைசி தேதி: 27-3-2023.

விண்ணப்பிப்பதற்கான வயது வரம்பு, கல்வித் தகுதி, விண்ணப்பிக்கும் விதம் பற்றிய விரிவான விவரங்களை தெரிந்து கொள்வதற்கு https://ssc.nic.in/ என்ற இணைய பக்கத்தை பார்வையிடலாம்.

Tags:    

மேலும் செய்திகள்