சாம்சங்கின் ஸ்மார்ட் மானிட்டர் எம் 8

சாம்சங் நிறுவனம் ஸ்மார்ட் மானிட்டர் எம் 8 ஐ அறிமுகம் செய்துள்ளது.

Update: 2022-06-23 14:21 GMT

அலுவல் செயல்பாடு மற்றும் பொழுதுபோக்கிற்கு என இரண்டு வகையான பயன்பாடுகளுக்கு இது ஏற்றது. பொழுதுபோக்கு காட்சிகளை பார்ப்பதற்கும், அலுவல் சார்ந்த பணிகளை செய்வதற்கும் ஏற்ப இதன் செயல்பாடு உள்ளது. இதில் ஸ்லிம்பிட் கேமராவும் உள்ளது. பர்சனல் கம்ப்யூட்டருக்கு பதிலாக இதை பயன்படுத்தலாம். இது தவிர ஓ.டி.டி. தளங்களான நெட்பிளிக்ஸ், அமேசான் பிரைம் வீடியோ, டிஸ்னி பிளஸ், ஆப்பிள் டி.வி. உள்ளிட்டவற்றை வை-பை இணைப்பு மூலம் பெறலாம்.

இணையதளம் மூலம் எடிட் செய்வது உள்ளிட்ட பணிகளை மேற்கொள்ள முடியும். இதனால் தனியாக பர்சனல் கம்ப்யூட்டர் தேவையில்லை. மைக்ரோசாப்ட் 365 மூலம் மற்றொரு பர்சனல் கம்ப்யூட்டருடன் இணைக்க முடியும். அதிலிருந்து சாம்சங் மொபைலை சாம்சங் டெக்ஸ் செயலி மூலமாக இணைத்து செயல்படுத்த முடியும். இதன் விலை சுமார் ரூ.11,999. வயர்லெஸ் கீ போர்டு விலை சுமார் ரூ.3,499.

Tags:    

மேலும் செய்திகள்