25 ஆண்டுகளை நிறைவு செய்த ஹாரிபாட்டர் தொடர்! ஹாரிபாட்டர் உருவம் பொறித்த சிறப்பு நாணயங்கள் வெளியீடு

ஹாரிபாட்டர் தொடர் வெளியாகி 25 ஆண்டுகள் நிறைவடைவதை சிறப்பிக்கும் வகையில் ஹாரிபாட்டர் நாணயங்களை ராயல் மிண்ட் வெளியிட்டுள்ளது.

Update: 2022-10-21 05:31 GMT

Image Credit:www.royalmint.com

லண்டன்,

உலகப்புகழ் பெற்ற ஹாரிபாட்டர் தொடர் வெளியாகி 25 ஆண்டுகள் நிறைவடைவதை சிறப்பிக்கும் வகையில் ஹாரிபாட்டர் உருவம் பொறித்த நாணயங்களை ராயல் மிண்ட் வெளியிட்டுள்ளது.

இங்கிலாந்தில் நாணயங்களைத் தயாரிக்கவும், அச்சிடவும் அரசால் அங்கீகரிக்கப்பட்ட நிறுவனமாக ராயல் மின்ட் செயல்பட்டு வருகிறது.

ஜே.கே.ரவுலிங் எழுதிய 'ஹாரி பாட்டர் அண்ட் தி பிலாசபர்ஸ் ஸ்டோன்' தொடர் முதன் முதலாக 1997ஆம் ஆண்டில் வெளியானது. இந்நிலையில், இங்கிலாந்தில் உள்ள அனைத்து நாணயங்களையும் தயாரிக்கும் ராயல் மிண்ட் நிறுவனம், ஹாரி பாட்டர் உருவம் பொறித்த 50பி(50 பென்ஸ்) நாணயங்களை வெளியிட்டுள்ளது.

இது குறித்து, ராயல் மிண்ட் நிறுவனம் கூறுகையில்:-

இந்த புதிய நாணயங்களில் ஹாரியின் முகம் மட்டுமல்ல, ராணி இரண்டாம் எலிசபெத் மற்றும் புதிய மன்னர் சார்லஸ்-III ஆகியோரின் உருவப்படங்களும் இருக்கும். மேலும், ஹாரிபாட்டர் தொடரில் இடம்பிடித்து மக்களை வெகுவாக கவர்ந்த டம்பில்டோர், ஹாக்வார்ட்ஸ் பள்ளி மற்றும் ஹாக்வார்ட்ஸ் எக்ஸ்பிரஸ் ஆகியவற்றின் உருவப்படங்களும் இருக்கும்.

நாணயங்களில் உள்ள வடிவமைப்பை, முடிந்தவரை துல்லியமாக வைத்திருக்க ராயல் மிண்ட் நிறுவனம் சிறப்பு லேசர்களைப் பயன்படுத்தி நாணயங்களில் வடிவமைப்புகளை உருவாக்கினர்.

சில சிறப்பு நாணயங்களும் வெளியிடப்பட உள்ளன. இந்த நாணயங்கள் ஒரு பிரகாசமான ஒளியின் கீழ் வைக்கப்படும் போது '25' என்ற எண் பொறிக்கப்பட்டிருப்பதை வெளிப்படுத்தும்.

இந்தத் தொடரின் முதல் இரண்டு 50பி நாணயங்கள் இந்த ஆண்டு வெளியிடப்பட உள்ளன. இறுதியாக, இரண்டு நாணயங்கள் அடுத்த ஆண்டு வெளியிடப்படும்.இந்த நாணயங்களுக்கு அதிக எதிர்பார்ப்பு இருக்கும் என்று எதிர்பார்க்கிறோம் என்று ராயல் மிண்ட் தெரிவித்துள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்