ரெட்மி ரைட்டிங் பேட்

மின்னணு சாதனங்கள் உற்பத்தியில் முன்னிலை வகிக்கும் ரெட்மி நிறுவனம் புதிதாக 8.5 அங்குல திரை கொண்ட ரைட்டிங் பேடை அறிமுகம் செய்துள்ளது.

Update: 2022-10-20 14:32 GMT

ஸ்டைலஸ் பேனாவுடன் வந்துள்ள இந்த பேடின் விலை சுமார் ரூ.599. பெரியவர்கள் முதல் சிறியவர்கள் வரை குறிப்புகள் எழுத, படம் வரைய இது மிகவும் உதவியாக இருக்கும். பேனாவில் எழுது வதற்கு எந்த அளவுக்கு அழுத்தம் தர வேண்டி யுள்ளது என்பது இதை உபயோகித்துப் பார்த்த பிறகு நிச்சயம் புரியும்.

இதில் எழுதுவது, குறிப்பெடுப்பது, படம் வரைவது போன்ற நடவடிக்கைகள் உங்களுக்கு புதிய அனுபவத்தை நிச்சயம் அளிக்கும். ஸ்மார்ட்போன் அளவுக்கு கண்களைக் கூசும் வகையில் வெளிச்சம் இதில் பரவாதது மிகவும் சாதக அம்சமாகும். எடை குறைவானதாக இருப்பதால் இதை எடுத்துச் செல்வதும் எளிது. எழுதியவற்றை அழிக்க இதில் தரப்பட்டுள்ள சிறிய ஆரஞ்சு நிற பொத்தானை அழுத்தினால் போதும்.

இதில் பட்டன் வடிவிலான சார்ஜ் செய்யக்கூடிய பேட்டரி பயன்படுத்தப்பட்டுள்ளது. இதன் ஆயுள் 20 ஆயிரம் பக்கங்கள் வரை நிலைத்திருக்கும். ஏ.பி.எஸ். பிளாஸ்டிக் மற்றும் பாலிமர் திரவ கிரிஸ்டல் டிஸ்பிளேயைக் கொண்டுள்ளது. கருப்பு நிறத்தில் வந்துள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்