ரியல்மி ஸ்மார்ட் டி.வி.

ரியல்மி நிறுவனம் முழுமையான ஹெச்.டி. திரையைக் கொண்ட ஸ்மார்ட் டி.வி.யை அறிமுகம் செய்துள்ளது.;

Update:2022-05-26 19:10 IST

இவை 40 அங்குலம் மற்றும் 43 அங்குல அளவுகளில் வந்துள்ளன. இதில் குரோமா பூஸ்ட் பிக்சர் என்ஜின் உள்ளது. இது திரைக் காட்சிகளை மிகச் சிறப்பாகவும், அதிக பிரகாச மாகவும், உரிய வண்ணம், துல்லியமான பதிவு களாக வெளிப்படுத்தும். இவற் றில் ஆண்ட்ராய்டு இயங்குதளம், உள்ளீடாக குரோம் காஸ்ட் ஆகியன உள்ளன. குவாட் கோர் கோர்டெக்ஸ் ஏ 55 மீடியாடெக் பிராசஸர் உள்ளது.

இதில் 1 ஜி.பி. ரேம், 8 ஜி.பி. நினைவகம் உள்ளது. இதன் ரிமோட்டில் யூ டியூப், நெட்பி ளிக்ஸ், பிரைம் வீடியோ மற்றும் கூகுள் அசிஸ்டென்ட் ஆகிய வற்றுக் கான பொத்தான்கள் உள்ளன. மொத்தம் 4 ஸ்பீக்க ர்கள் உள்ளன. இவை 24 வாட் திறனை வெளிப்படுத்துபவை. 40 அங்குல டி.வி.யின் விலை சுமார் ரூ.22,999. 43 அங்குல டி.வி.யின் விலை சுமார் ரூ.25,999.

Tags:    

மேலும் செய்திகள்