ரேஜர் மேக்பிக்ஸ் வயர்லெஸ் சார்ஜர்

ரேஜர் நிறுவனம் மேக்பிக்ஸ் ஆர்க் எம் 1050 என்ற பெயரில் புதிய ரக வயர்லெஸ் சார்ஜரை அறிமுகம் செய்துள்ளது.;

Update:2023-02-02 20:32 IST

இதில் ஆப்பிள் மின்னணு சாதனங்களை மூன்று வழிகளில் சார்ஜ் செய்ய முடியும். இது முழுவதும் அலுமினியம் அலாய் பிரேமினால் ஆனது. மிக அழகிய வடிவமைப்பைக் கொண்டதாக இது உருவாக்கப் பட்டுள்ளது. 15 வாட் திறன் கொண்டதாக மின்னணு சாதனங்களை விரைவாக சார்ஜ் செய்யும் வகையிலானது.

இதில் ஆண்ட்ராய்டு இயங்குதளங்களைக் கொண்ட ஸ்மார்ட்போன் உள்ளிட்டவற்றையும் சார்ஜ் செய்ய முடியும். இதில் ஒரே சமயத்தில் ஸ்மார்ட்போன், ஏர்போட், ஸ்மார்ட் கடிகாரத்தை சார்ஜ் செய்ய முடியும். இதில் உள்ள சிலிக்கான் பகுதி மின்னணு சாதனங்கள் கீழே விழாமல் இறுக பிடித்துக் கொள்ளும் தன்மை கொண்டது.

மேலும் இதில் ஸ்டாண்ட் போன்ற வடிவமைப்பு உள்ளதால் ஸ்மார்ட்போன் சார்ஜ் ஆகும் போதே வீடியோ காட்சிகள் அல்லது தகவல்களை படிக்க முடியும். ஷார்ட் சர்கியூட் ஆவதைத் தடுக்கும். அதிகம் சூடேறாத தன்மை கொண்டது. 5 வாட் முதல் 15 வாட் வரை மின்னணு சாதனங்கள் சார்ஜ் ஆகும் தன்மைக்கேற்ப மின்சாரத்தை சீராக அனுப்பும்.

இதன் விலை சுமார் ரூ.2,399.

Tags:    

மேலும் செய்திகள்