ஓ.என்.ஜி.சி யில் பட்டதாரிகளுக்கு பணிவாய்ப்பு

ஓ.என்.ஜி.சி நிறுவனத்தில் பல்வேறு பணி பிரிவுகளில் 871 பேர் தேர்வு செய்யப்பட உள்ளனர்.;

Update:2022-10-07 20:21 IST

ஆயில் அண்ட் நேச்சுரல் கியாஸ் கார்ப்பரேஷன் லிமிடெட் (ஓ.என்.ஜி.சி.) நிறுவனத்தில் வேதியியலாளர், புவியியலாளர், திட்ட அதிகாரி, போக்குவரத்து அதிகாரி உள்பட பல்வேறு பணி பிரிவுகளில் 871 பேர் தேர்வு செய்யப்பட உள்ளனர். பணியின் தன்மைக்கேற்ப என்ஜினீயரிங், முதுகலை பட்டப்படிப்பு, இளங்கலை படிப்பு, டிப்ளமோ போன்றவை கல்வி தகுதிகளாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. 31-7-2022 அன்றைய தேதிப்படி 28 முதல் 40 வயதுக்குட்பட்டவர்கள் விண்ணப்பிக்கலாம்.

விண்ணப்பிக்க கடைசி தேதி: 12-10-2022. விண்ணப்ப நடைமுறை பற்றிய விரிவான விவரங்களை https://www.ongcindia.com/ என்ற இணைய பக்கத்தில் தெரிந்து கொள்ளலாம்.

Tags:    

மேலும் செய்திகள்