நத்திங் ஸ்மார்ட்போன்
நத்திங் என்ற பெயரில் புதிய ரக ஸ்மார்ட்போன் அறிமுகமாகியுள்ளது. இதை நத்திங் நிறுவனம் தயாரித்து வெளியிட்டுள்ளது.
இது 6.55 அங்குல ஓலெட் திரையைக் கொண்டுள்ளது. இதில் ஸ்நாப்டிராகன் 77 8-ஜி பிராசஸர் மற்றும் 12 ஜி.பி. ரேம் உள்ளது. இதன் மேல்பாகம் மறு சுழற்சி செய்யப்பட்ட அலுமினியத்தால் ஆனது. இதில் உள்ள 50 சதவீத பிளாஸ்டிக் பாகங்கள் மக்கும் தன்மை கொண்டவை. இதன் பின்புறம் 50 மெகா பிக்ஸெல் கேமரா உள்ளது. முன்புறம் 16 மெகா பிக்ஸெல் கேமரா உள்ளது. 4,500 எம்.ஏ.ஹெச். திறன் கொண்ட பேட்டரி 5 வாட் சார்ஜருடன் வந்துள்ளது. 30 நிமிடத்தில் 50 சதவீதம் சார்ஜ் ஆகிவிடும்.
இதில் ஆண்ட்ராய்டு 12 இயங்குதளம் உள்ளது. இரண்டு சிம் கார்டு போடும் வசதி கொண்டது. திரையிலேயே விரல் ரேகை உணர் சென்சார் உள்ளது. இதன் விலை சுமார் ரூ.32,999. பிரீமியம் மாடலான 12 ஜி.பி.ரேம், 256 ஜி.பி. நினைவகம் கொண்ட மாடலின் விலை சுமார் ரூ.38,999.