நோக்கியா 110 செல்போன்
நோக்கியா மொபைல்போன்களைத் தயாரிக்கும் ஹெச்.எம்.டி. குளோபல் நிறுவனம் நோக்கியா 110 மாடல் செல்போனை அறிமுகம் செய்துள்ளது.
பின்புறம் கேமரா, மியூசிக் பிளேயர், டார்ச் லைட், ரேடியோ மற்றும் அழைப்புகளை பதிவு செய்யும் வசதி, அதிக நினைவக வசதி (32 ஜி.பி.) உள்ளிட்ட பல அம்சங்கள் இதில் உள்ளன. 8 ஆயிரம் பாடல்களை பதிவு செய்து கேட்டு மகிழ முடியும். இரண்டு சிம் கார்டு போடும் வசதி கொண்டது.
இதில் 1,000 எம்.ஏ.ஹெச். திறன் கொண்ட பேட்டரி பயன்படுத்தப் பட்டுள்ளது. சார்கோல், சியான், ரோஸ்கோல்டு உள்ளிட்ட வண்ணங்களில் இது கிடைக்கும். இதன் விலை ரூ.1,699. ரோஸ் கோல்டு மாடல் விலை சுமார் ரூ.1,799.