நெக்சான், ஹாரியர், சபாரி ஜெட் எடிஷன்

வாகனத் தயாரிப்பில் ஈடுபட்டுள்ள இந்திய நிறுவன மான டாடா மோட்டார்ஸ், தனது எஸ்.யு.வி. மாடல் கார்களான நெக்சான், ஹாரியர், சபாரி மாடல்களில் புதிதாக ஜெட் எடிஷனை அறிமுகம் செய்துள்ளது.

Update: 2022-09-07 08:02 GMT

நெக்சான் மாடலில் ஜெட் எடிஷன் ஆரம்ப விலை சுமார் ரூ.12.13 லட்சம். ஹாரியரின் விலை சுமார் ரூ.20.90 லட்சம், சபாரி மாடல் விலை சுமார் ரூ.21.35 லட்சம்.

ஜெட் எடிஷன் மாடல்கள் பெரும்பாலும் இந்நிறுவனத்தின் பிரீமியம் மாடலான எக்ஸ்.இஸட். பிளஸ் மாடலைப் போன்ற சிறப்பம்சங்களைக் கொண்டதாக இருக்கும். ஜெட் எடிஷன் மாடல் பெரும்பாலும் இரட்டை வண்ணங்களைக் கொண்டதாக வந்துள்ளது. அலாய் சக்கரம் மற்றும் சில்வர் ஸ்கிட் பிளேட் ஆகியன இதன் சிறப்புகளாகும். ஹாரியரில் கூடுதல் சிறப்பு அம்சமாக டிரைவர் கண்ணயர்ந்தால் எச்சரித்து உணர்த்தும், அவசரகால பிரேக் வசதி, மேலும் அவசரமாக பிரேக் போட்டதற்கு பிந்தைய சூழலை உணர்த்தும் வசதிகள் உள்ளன.

அனைத்து வரிசையிலும் யு.எஸ்.பி. சார்ஜர், எலெக்ட்ரானிக் பார்க்கிங் பிரேக் வசதி உள்ளது. நான்கு சக்கரங்களும் டிஸ்க் பிரேக் வசதி கொண்டது. நெக்ஸான் மாடல் 1.2 லிட்டர் 3 சிலிண்டர் டர்போ சார்ஜ்டு பெட்ரோல் என்ஜினைக் கொண்டதாக வந்துள்ளது. இது 110 பி.ஹெச்.பி. திறனை வெளிப்படுத்தும்.

இதில் மற்றொரு மாடலாக 1.5 லிட்டர் 4 சிலிண்டர் என்ஜின் கொண்ட மாடலும் வந்துள்ளது. இந்த வேரியன்ட் டீசல் மாடலாகும். 6 ஸ்பீடு கியர்கள், மேனுவல் மற்றும் ஸ்பீடு கியர் வசதி கொண்டது. நெக்சான் மாடலில் 1.2 லிட்டர் 3 சிலிண்டர் டர்போ சார்ஜ்டு பெட்ரோல் மாடல் மற்றும் 1.5 லிட்டர் 4 சிலிண்டர் டர்போ டீசல் மாடல் வந்துள்ளது. இவையும் 6 கியர்கள் மேனுவல் மற்றும் ஏ.எம்.டி. பிரிவில் வந்துள்ளன. சபாரி மாடலில் ஜெட் எடிஷன் 2 லிட்டர் 4 சிலிண்டர் டர்போ சார்ஜ்டு என்ஜினைக் கொண்டது. இது 170 பி.ஹெச்.பி. மற்றும் 350 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்தும்.

Tags:    

மேலும் செய்திகள்