மஹிந்திரா எக்ஸ்.யு.வி 300. டர்போ ஸ்போர்ட்

எஸ்.யு.வி. கார்கள் தயாரிப்பில் முன்னணியில் திகழும் இந்திய நிறுவனமான மஹிந்திரா அண்ட் மஹிந்திரா நிறுவனம் தனது எக்ஸ்.யு.வி 300. மாடலில் ஸ்போர்ட் சீரிஸ் மாடல்களை அறிமுகம் செய்துள்ளது.;

Update:2022-10-20 18:39 IST

இதன் விற்பனையக விலை சுமார் ரூ.10.35 லட்சம். பிரீமியம் மாடலின் விலை சுமார் ரூ.12.90 லட்சம். இந்த மாடலில் 1.2 லிட்டர் எம் ஸ்டாலியோன் டி.ஜி.டி.ஐ. என்ஜின் பொருத்தப்பட்டுள்ளது.

இது 130 பி.எஸ். திறனை 5 ஆயிரம் ஆர்.பி.எம். சுழற்சியிலும் 230 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை 3750 ஆர்.பி.எம். சுழற்சியிலும் வெளிப்படுத்தும். நான்கு கண்கவர் வண்ணங்களிலும், 3 புதிய இரட்டை வண்ணங்களிலும் இது வந்துள்ளது. சிவப்பு கிரில் உள்பகுதி, கருப்பு ரியர் வியூ மிரர், உள்புறம் கருப்பு வண்ணம், குரோமியம் கைப்பிடி, இரட்டை வண்ண வெளிப்பகுதி ஆகியவற்றுடன் ஸ்போர்ட் மாடலாக இது வந்துள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்